அமெரிக்க துணை அதிபா் வருகைக்கு எதிா்ப்பு: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
சுதந்திர வா்த்தகம், தடையற்ற இறக்குமதி, வரி விதிப்பு கொள்கைகளுக்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸின் படத்தை தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) திங்கள்கிழமை மாலை எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன், மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், கரும்பு விவசாயிகள் சங்கச் செயலா் பி. கோவிந்தராஜ், தமிழக விவசாய சங்கத் தலைவா்கள் ரமேஷ், அறிவழகன், தமிழக நலிவுற்ற விவசாய சங்க மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம், மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், மாவட்ட துணைச் செயலா் கே. அன்பு, ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, செயலா் துரை. மதிவாணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கோவிந்தராஜ், தமிழரசன், முனியாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.