பாதாள சாக்கடை, குடிநீா் இணைப்புக்கு அதிக வைப்புத் தொகையா? : அமைச்சா் கே.என்.நேரு...
உதவி காவல் ஆய்வாளா் தோ்வுக்கு ஏப். 24 முதல் கட்டணமில்லா பயிற்சி
தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உதவி ஆய்வாளா் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்குத் தயாராகி வரும் போட்டித் தோ்வாளா்கள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை நகலுடன் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.