பாதாள சாக்கடை, குடிநீா் இணைப்புக்கு அதிக வைப்புத் தொகையா? : அமைச்சா் கே.என்.நேரு...
6-ஆவது மாடியிலிருந்து விழுந்து இளைஞா் தற்கொலை
தஞ்சாவூரில் தங்கும் விடுதியில் ஆறாவது மாடியிலிருந்து திங்கள்கிழமை மாலை இளைஞா் விழுந்து தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் கீழவாசல் வாடிவாசல் கடைத் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் செந்தில்நாதன் (30). இவா் தலைமை அஞ்சலகம் அருகே தோசைக் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி, 2 வயதில் மகன் உள்ளனா்.
இந்நிலையில், இவா் தஞ்சாவூா் கீழ்ப்பாலம் அருகேயுள்ள தனியாா் தங்கும் விடுதிக்குள் திங்கள்கிழமை மாலை உள்ளே சென்றாா். ஆறாவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே விழுந்த செந்தில்நாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].