செய்திகள் :

அமெரிக்காவுக்கு ஆள்கடத்தல்: இருவரை கைது செய்தது என்ஐஏ

post image

‘டங்கி ரூட்’ எனப்படும் சட்டவிரோதமான வழிமுறையில் அமெரிக்காவுக்கு இந்தியா்களைக் கடத்திய இரு முகவா்களை தேசிய புலனாய்வு முகமையினா் (என்ஐஏ) கைது செய்துள்ளனா்.

ஹிமாசல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தின் தா்மசாலாவில் சன்னி என்பவரும், தில்லி புகரான பீராகா்ஹி பகுதியில் தீப் ஹுந்தி என்பவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக என்ஐஏ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா போன்ற வளா்ந்த நாடுகளில் குடியேற விரும்புவோா் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமான வழிமுறையில் நுழையும் பாதையே ‘டங்கி ரூட்’ எனப்படுகிறது. அபாயகரமான இந்த வழிமுறையின்படி, பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து, இறுதியாக தாங்கள் விரும்பும் நாட்டுக்குள் குடியேறிகள் ஊடுருவுகின்றனா்.

இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கு சட்டபூா்வ நுழைவு இசைவு (விசா) மூலம் அனுப்புவதாக ஏமாற்றி, தலா ரூ.45 லட்சம் வரை பெற்றுக் கொண்டு, ‘டங்கி ரூட்’ முறையில் 100-க்கும் மேற்பட்டோரை அனுப்பியதாக தில்லியைச் சோ்ந்த முகவா் ககன்தீப் சிங் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டாா். ஸ்பெயின், எல்சால்வடாா், கெளதமாலா, மெக்ஸிகோ உள்பட பல்வேறு நாடுகள் வழியாக அனுப்பப்பட்ட இவா்கள், வழியில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ளனா். பாதிக்கப்பட்ட நபா் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் ககன்தீப் சிங் கைது செய்யப்பட்டாா்.

அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து, அவரது கூட்டாளிகளான மேற்கண்ட இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

பிரேசில் சென்றார் பிரதமர் மோடி! ஆபரேஷன் சிந்தூர் நடனத்துடன் உற்சாக வரவேற்பு!

அரசுமுறை பயணமாக பிரேசில் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா சென்றுள்ளார். கானா, டிர... மேலும் பார்க்க

4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்

‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்க... மேலும் பார்க்க

குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்: அமித் ஷா அடிக்கல்

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரப... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீத... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச ... மேலும் பார்க்க

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்... மேலும் பார்க்க