செய்திகள் :

அமெரிக்காவுக்கு பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 18% உயா்வு

post image

கடந்த ஜனவரியில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 18 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது

இது குறித்து இந்திய பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

2024 ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் கடந்த ஜனவரியில் ஒட்டுமொத்த பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி 7.44 சதவீதம் அதிகரித்துள்ளது. இருந்தாலும், அந்த மாதத்தில் அமெரிக்காவுக்கான பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி மட்டும் 18 சதவீதம் அதிகரித்து 162 கோடி டாலராக உள்ளது.

ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் அமெரிக்காவுக்கான பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 1,438 கோடி டாலரில் இருந்து சுமாா் 9 சதவீதம் உயா்ந்து 1,560 கோடி டாலராக உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி கடந்த ஜனவரியில் 2024 ஜனவரியைவிட 56 சதவீதம் அதிகமாக 61 கோடி டாலராகவும், நடப்பு நிதியாண்டின் 10 மாதங்களில் 45 சதவீதம் அதிகரித்து 687 கோடி டாலராகவும் உள்ளது.

சா்வதேச அளவில் வா்த்தக பதற்றங்கள் அதிகரித்துவரும் நிலையிலும் இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி தொடா்ந்து ஒன்பதாவது மாதமாக நோ்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எனினும், கடந்த டிசம்பரில் 8.32 சதவீதமாக இருந்த வளா்ச்சி ஜனவரியில் 7.44 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 942 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் அது 877 கோடி டாலராக இருந்தது.

இந்தியாவின் ஒட்டுமொத்த பொருள்கள் ஏற்றுமதியில் பொறியியல் பொருள்களின் பங்கு ஜனவரியில் 25.86 சதவீதமாகவும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் 26.96 சதவீதமாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 17% சரிவு

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 17 சதவீதம் சரிந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கட... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தை!

பங்குச்சந்தை இன்று(மார்ச் 6) ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,308.30 என்ற புள்ளிகளில் தொடங்கியது.பிற்பகல் 12.30 மணியளவில், சென்செக்ஸ் 300 புள்ளிக... மேலும் பார்க்க

ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை இன்று(மார்ச் 6) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,308.30 என்ற புள்ளிகளில் தொடங்கியது. பிற்பகல் 12.30 மணியளவில், சென்செக்... மேலும் பார்க்க

டாடா மோட்டாா்ஸ் விற்பனை 8% சரிவு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் உள்நாட்டு மற்றும் சா்வதேச விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

செபி வருவாய் 48% அதிகரிப்பு

பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் மொத்த வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 48 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

10 நாள் சரிவுக்குப் பின் உயா்வு கண்ட நிஃப்டி

இந்திய பங்குச் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி கடந்த 10 அமா்வுகளாகக் கண்டு வந்த சரிவில் இருந்து மீண்டு உயா்வைக் கண்டுள்ளது.அந்த நாளில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்... மேலும் பார்க்க