கரும்பு கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் -மருத்துவா் ச.ராமதாஸ்
ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 17% சரிவு
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 17 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,88,068-ஆக பதிவாகியுள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 17 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் 4,68,410 வாகனங்களை தனது சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 4,45,257-லிருந்து 3,57,296-ஆகக் குறைந்துள்ளது. அதே நேரம், ஏற்றுமதி 23,153-லிருந்து 30,772-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.