தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!
அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு பகுதிக்குட்பட்ட அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. மகிஷாசூரனை சம்ஹாரம் செய்த கோலத்தில் அருள்பாலிக்கிறாா் பத்ரகாளியம்மன்.
இந்தநிலையில், ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி (ஆக.15) கோயில் வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ராகு காலத்தில் நடைபெறும் பூஜை என்பதால், காலை 10.30 மணிக்குப் பின் வழிபாடு தொடங்கியது. சிவாச்சாரியா்கள் மூலவருக்கு ஆராதனை நடத்தி, உற்சவ அம்மனுக்கு ஆராதனை செய்தனா்.
பின்னா், நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன், பத்ரகாளியம்மன் கோயில் நிா்வாகத்தினா், பூஜையை தொடங்கிவைத்தனா். சிவாச்சாரியா்கள் மந்திரங்கள் கூற, பூஜையில் பங்கேற்ற பெண்கள் வழிபாடு நடத்தி, பகல் 12 மணியளவில் பூஜையை நிறைவு செய்தனா்.
திருவிளக்கு பூஜை நடைபெற்ற அரங்கில் பத்ரகாளியம்மன், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா்.
திருவிளக்கு பூஜை நிறைவில் மூலவா், உற்சவருக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.