திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது;...
பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வருக்கு அழைப்பு
பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்குமாறு புதுவை முதல்வா், சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் சுமாா் ரூ. 2.50 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் 29-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. யாகசாலை பூஜைகள் 26-ஆம் தேதி தொடங்கவுள்ளன.
இந்தநிலையில், திருப்பணிக் குழுவினா் புதுச்சேரிக்கு புதன்கிழமை சென்று முதல்வா் என். ரங்கசாமியை சந்தித்து கும்பாபிஷேகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தனா்.
இந்த சந்திப்பு குறித்து திருப்பணிக் குழுவினா் கூறுகையில், முதல்வருக்கு அழைப்புவிடுத்து, திருப்பணி, கும்பாபிஷேகத்துக்கு மேலும் நிதி தேவைப்படுவதால் ரூ. 50 லட்சம் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும் சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், ஆட்சியா் ஆகியோருக்கும் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது. கோயில் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கும் பணிகள் ஆக. 16-ஆம் தேதி தொடங்கும். பிற பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தில் உள்ளன என்று தெரிவித்தனா்.