மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
நகராட்சி வசூல் செய்யும் குப்பை வரியை ரத்து செய்ய முதல்வரிடம் வலியுறுத்தல்
காரைக்கால் நகராட்சி வசூலிக்கும் குப்பை வரியை ரத்து செய்யவேண்டும் என புதுவை முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுவை முதல்வா் என். ரங்கசாமியை, காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் என். பாலகிருஷ்ணன், செயலாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:
புதுவை வணிக நல வாரியத்தில் காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸை சோ்ந்த 2 உறுப்பினா்களை சோ்க்க வேண்டும். காரைக்கால் நகராட்சி வசூலிக்கும் குப்பை வரியை ரத்து செய்யவேண்டும்.
காரைக்காலில் இருந்து இரவு நேரத்தில் கும்பகோணம், தஞ்சாவூா், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ஊா்களுக்குச் செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைப்பதற்கு அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாங்கண்ணியிலிருந்து மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு பல ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சில ரயில்கள் காரைக்கால் வழியாக செல்ல புதுவை அரசு ஏற்பாடு செய்யவேண்டும். காரைக்கால் மாஸ்டா் பிளான் திட்டத்தை விரைந்து செயலாக்கத்துக்கு கொண்டுவரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.