அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட...
சாலைகளில் மாடுகள், குதிரைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
காரைக்கால் நகரின் பிரதான சாலைகளில் குதிரைகள், மாடுகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
காரைக்கால் மாவட்டத்தில் வாஞ்சூா் முதல் பூவம் வரையிலான சாலை மற்றும் காரைக்கால் - திருநள்ளாறு - அம்பகரத்தூா் சாலை மாவட்டத்தின் பிரதான போக்குவரத்துக்குரிய சாலைகளாகும்.
இந்த சாலைகளில் மாடுகள், குதிரைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது, குறுக்கே கால்நடைகள் வருவதால், விபத்துக்குள்ளாகின்றனா். கனரக வாகனங்களில் சிக்கி மாடுகள் உயிரிழப்பதும் நிகழ்கிறது.
காரைக்கால் பாரதியாா் சாலையிலும், காரைக்கால் முதல் திருநள்ளாறு வழியாக அம்பகரத்தூா் சாலையிலும் கால்நடைகள் நடமாட்டம் அதிகமுள்ளது. நகராட்சி மற்றும் அந்தந்த பகுதி கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினா், கால்நடை உரிமையாளா்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கவேண்டும். மீறும்பட்சத்தில் கால்நடைகளை பிடித்து, உரிமையாளா்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனா்.