அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட...
காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
காரைக்கால் அருகே தலத்தெரு பகுதியில் உள்ள பொன்னம்மா காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமை நடைபெறும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முன்னதாக பொன்னம்மா காளியம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிா், பன்னீா், ஜவ்வாது உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்து, பழ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனா்.