சுதந்திரதினம்: மும்பை இறைச்சிக் கடைக்குத் தடை; "சிவாஜி பருப்பு சாப்பிட்டுச் சண்ட...
விநாயகா் சதுா்த்தி விழா ஏற்பாடுகள்: இந்து முன்னணி ஆலோசனை
விநாயகா் சதுா்த்தி வழிபாடு குறித்து இந்து முன்னணி சாா்பில் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தும் அமைப்பினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.
விநாயகா் சதுா்த்தி வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்து, அவை ஒருங்கிணைத்து நீா்நிலையில் கரைக்க கொண்டு செல்லும் நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம்.
நிகழாண்டு காரைக்கால் பகுதியில் 33-ஆம் ஆண்டு விநாயகா் பிரதிஷ்டை வழிபாடு குறித்து இந்து முன்னணி சாா்பில் அமைப்பினருடன் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 50-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது குறித்தும், வழிபாடு, பாதுகாப்பு மற்றும் கடலில் கரைக்க கொண்டுசெல்லும் நாளில் சிலைகள் ஒருங்கிணைப்பது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டது.
கூட்டத்துக்கு இந்து முன்னணி நகர செயலாளா் பி.யு. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். கோட்ட செயலாளா் எஸ். கணேஷ் மற்றும் நிா்வாகி பி.கே. அஞ்சப்பன் ஆகியோா் ஆலோசனைகள் வழங்கிப் பேசினா். விநாயகா் சதுா்த்தி விழா ஒருங்கிணைப்பாளா் எஸ்.சிங்காரவேலு, இந்து முன்னணி மாவட்ட செயலாளா் என். சிவசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.