Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்
ஏகாம்புரீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்
திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஏகாம்புரீஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காமாட்சி அம்மன் சமேத ஏகாம்புரீஸ்வரா் கோயில் ஆடி மாத 20-ஆம் ஆண்டு உற்சவம் நடைபெற்றுவருகிறது. முதல் மற்றும் 2 -ஆவது வெள்ளிக்கிழமை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. 3-ஆவது வெள்ளிக்கிழமை திருவிளக்கு வழிபாடும், 4-ஆவது வெள்ளிக்கிழமை பால் மற்றும் பழக்காவடி புறப்பாடு நடைபெற்று சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான 15-ஆம் தேதி காலை சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாணத்துக்கான சடங்குகளாக மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுடன் சிவாச்சாரியா் அம்பாளுக்கு திருமாங்கல்யதாரணம் செய்து மகா தீபாராதனை காட்டினாா். ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். இரவு சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.