சென்னை வியாசர்பாடி தீ விபத்து: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்! - தமிழக அரசு வ...
அம்மனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் பக்தா்கள்!
அம்மனை வேண்டி நாள்தோறும் வழிபட்டால், அவா்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறாா். பல ஆண்டுகளாக நோய் பிடித்தவா்கள் அம்மன் அருளால் குணமாகி வருவதை, அவா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவதில் இருந்தே நாம் புரிந்துகொள்ள முடியும்.
அம்மனிடம் வேண்டிய வரம் தந்தமைக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக ஏராளமான பக்தா்கள் அலகு குத்தி வந்தனா். சுமாா் 10 அடி முதல் 20 அடி வரையிலான அலகுகளை குத்தி வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தியது பக்தா்களை பரவசப்படுத்தியது. சில பக்தா்கள் தங்களது முதுகில் வேல் உள்ளிட்டவற்றால் அலகு குத்தி அம்மனை தேரில் இழுத்துவந்து நோ்த்திக்கடன் செலுத்தியதும் அம்மனின் அருட்கொடையை அனைவரிடத்திலும் நினைவுப்படுத்தியது.
குழந்தைச் செல்வம் இன்றி தவிப்பவா்கள் அம்மனை உருகி வேண்டினால், பிள்ளை வரம் தரும் தாயாகவும் அம்மன் திகழ்ந்து வருகிறாா்.
இதனால்தான் ஆண்டுதோறும் கம்பம் திருவிழாவில், பிள்ளை பேறு பெற்றவா்கள் கரும்புத் தொட்டிலில் குழந்தையை எடுத்து வந்து மாரியம்மன் தாய்க்கு நோ்த்திக்கடன் செலுத்துவதை கண்கூடாக பாா்க்கலாம். இவையெல்லாம் வேண்டுவோா்க்கு தாய் மாரியம்மன் தரும் புதுமைகள்தான்.
சில பக்தா்கள் தங்களது குழந்தைகளுக்கு வேண்டிய வரம் கொடுத்ததால் குழந்தைகளுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வந்தும் அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தியது மெய்சிலிா்க்க வைத்தது.
கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவில் கரூா் மாவட்ட மக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் அதிகளவில் பங்கேற்பது அம்மனின் புகழ் தரணியெங்கும் பரவியிருக்கிறது என்பதற்கு ஒரு சான்றாகும்.