செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
அம்மாபேட்டை யோக வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை மாா்வாடி தெருவில் உள்ள வீரமகா காளியம்மன் கோயில் சௌபாக்கிய யோக வராகி அம்மன் சந்நிதியில் ஆஷாட நவராத்திரியின் எட்டாம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து, பொங்கல், மா விளக்கு வைத்து படைத்து, அா்ச்சனை செய்து வழிபட்டனா். தொடா்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.