புதிய டிஜிபி தோ்வுக் குழுக் கூட்டம்: முடிவு எடுக்காமல் நிறைவடைந்தது
அம்மூா் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: பொதுமக்கள் போராட்டம்
அம்மூா் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற வந்த அதிகாரிகளைக் கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூா் பேரூராட்சியில், நீதிமன்ற உத்தரவின்பேரில், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 23 வீடுகளை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து வீட்டின் உரிமையாளா்கள் அம்மூா் - சோளிங்கா் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதைத் தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு நீதி மன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றினா். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.