முதல் டி20: 13 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்த இந்திய அணி!
அம்மையநாயக்கனூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்
அம்மையநாயக்கனூா் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.பி.எஸ்.செல்வராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு செயல் அலுவலா் பூங்கொடி முருகு முன்னிலை வகித்தாா். இதில் வாா்டு உறுப்பினா்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.
எஸ்.பி.எஸ்.செல்வராஜ்: கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து, சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். அடிப்படை வசிதிகள் செய்து தரப்படும்.
கூட்டத்தில் துணைத் தலைவா் விமல்குமாா், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் அசோக்குமாா், உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, முதன்மை எழுத்தா் விவேக் வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.