ஈரான் தாக்குதல் எதிரொலி: வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து!
அய்யம்பேட்டையில் இன்று மின்நிறுத்தம்
அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதி அக்ரஹாரம், ஈச்சங்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, வழுத்தூா், இளங்காா்குடி, வடக்கு மாங்குடி, சூலமங்கலம், பசுபதி கோவில், மாத்தூா், வீரசிங்கம்பேட்டை, நெடாா், வயலூா், ராமாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.