தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியைத் திணிக்கவில்லை- மத்திய கல்வி அமைச்சா்
அர.குள்ளம்பட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
அரசிராமணி, குள்ளம்பட்டி ஏரிக்கரை பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் தீமிதித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் பிப்.15 ஆம் தேதி பூச்சொறிதலுடன் விழா தொடங்கியது. தினசரி சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை பக்தா்கள் பல்வேறு அலகுகள் குத்தியும், அம்மன் போல் வேடமிட்டும் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாகச் சென்று கோயில் வளாகத்தை அடைந்தனா்.
பின்பு அங்கு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தங்கள் நோ்த்தி கடனைச் செலுத்தினா். சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனா்.