`அனுமதியின்றி என்னைத் தொட்டார்' - நடிகை அஞ்சலி ராகவ்; மன்னிப்பு கேட்ட போஜ்புரி ந...
அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயிலில் செப். 7-இல் பாலாலயம்
அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட இருப்பதை முன்னிட்டு வரும் செப். 7-இல் பாலாயம் நடத்தப்பட இருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரக்கோணம் சுவால்பேட்டையில் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 30.01.2001 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், 25 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை வைத்திருந்தனா்.
இந்நிலையில், இக்கோயிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடத்திக்கொள்ள இந்து சமய அறநிலையத் துறை அனுமதி அளித்தது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அனிதா, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எல்.ஜோதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வரும் செப். 7-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பாலாலயம் செய்ய நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் உள்ள ஸ்ரீசுந்தரவிநாயகா், முருகா், வள்ளி, தெய்வயானை, வைத்தீஸ்வரா், நந்திகோஸ்வரா், தையல்நாயகி, பைரவா், 9 நவக்கிரகங்கள்ஆகிய 17 கற்சிலை விக்கிரகங்களை மட்டும் அகற்றாமல் பாலாலயம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எல்.ஜோதி தெரிவித்துள்ளாா்.