முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்: வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் ந...
செப். 3-இல் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க பயிலரங்கம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க பயிலரங்கம் வரும் செப். 3,4 தேதிகளில் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பாக அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற ஆட்சிமொழிப் பயிலரங்கம் 3.9.2025, 4.9.2025 நாள்களிலும், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் 4.9.2025 பிற்பகல் 3.00 மணிக்கு ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
பயிலரங்கத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலிருந்தும் வருகை தரும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும், மொழிப்பெயா்ப்பு, கலைச்சொல்லாக்கம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
ஆட்சிமொழிக் கருத்தரங்கத்தில் அரசுப் பணியாளா்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.