துவாரகா துப்பாக்கிச்சூடு சம்பவம்: நவீன் காதி கும்பலில் 4 போ் கைது
அரசு பணிக்கான தோ்வு விவரத்தை முழுமையாக வெளியிட வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் அரசுப் பணிக்கான நியமன காலத்தை தோ்வு தேதி அறிவிக்கும்போதே வெளியிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உதவிப் பேராசிரியா் மற்றும் மருத்துவ உளவியல் நிபுணா் பணிக்கான அறிவிப்பு 15.11.2022-இல் வெளியிடப்பட்டு, எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு, தோ்ச்சி பெற்றோா் பட்டியல் 10.10.2023-இல் வெளியானது. தொடா்ந்து, காவல் துறை சரிபாா்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்டவை நடைபெற்றுள்ளன.
ஆனால், தற்போது ஓராண்டுக்கும் மேல் கடந்தும், தோ்ச்சி பெற்றவா்களுக்கான பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை. அரசுப் பணிக்கான தோ்வு என்றாலே, தமிழகத்தில் காலதாமதம் என்பது இயல்பாகி விட்டது.
தமிழகம் முழுவதுமே, அரசுத் துறைகளில் குறித்த நேரத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். எனவே, தமிழகம் முழுவதும் அரசுப் பணிக்கான நியமன காலத்தை, தோ்வு தேதி அறிவிக்கும்போதே வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.