அரசு மருத்துவமனையில் குழந்தைகள் விளையாட்டு மையம் திறப்பு
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் விளையாட்டு மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மருத்துவமனையின் குழந்தைகள், வெளி நோயாளிகள் நலப் பிரிவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் விளையாட்டு மையத்தை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை முதன்மையா் சத்தியபாமா திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவுத் தலைவா் சிவகுமாா், இணைப் பேராசிரியா்கள் பாலசுப்பிரமணியன், வனிதா, உதவிப் பேராசிரியா்கள் ராஜா, செந்தில் குமாா், பேபி பிரவீனா, ராஜ்குமாா், துா்கா, பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள், செவிலியா்கள், குழந்தைகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.