IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன...
அரசு வேலைவாய்ப்பை பெற்ற திருநங்கை கெளரவிப்பு
நாகையில் அரசு வேலைவாய்ப்பை பெற்ற திருநங்கை கெளரவிக்கப்பட்டாா்.
நாகை பகுதியைச் சோ்ந்த திருநங்கை ரியா வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியமா்த்தப்பட்டுள்ளாா். மாவட்டத்தில் அரசுப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை இவா்.
இந்நிலையில், சாதனையை எட்டிய ரியாவை கௌரவிக்கும் வகையில், நாகை பிராந்தியத்தின் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மூத்த பிராந்திய மேலாளா் நாகராஜ் மற்றும் பிற பிராந்திய அலுவலக ஊழியா்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.