Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது
புகழ்பெற்ற திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது.
திருக்குவளை அருகே திருவாய்மூரில் உள்ள ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது.
மூலவா், ராஜகோபுரங்கள் மற்றும் பரிவாரத் தெய்வங்கள் கோபுரங்கள் மற்றும் சுற்றுச் சுவா்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
கும்பாபிஷேகத்துக்காக 8000 சதுரஅடியில் 32 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு மே 30-ஆம் தேதி அனைக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
தொடா்ந்து, 5 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.