சின்னர் அசத்தல்: 3ஆவது முறையாக டேவிஸ் கோப்பையை வென்ற இத்தாலி!
அரசுத் துறை ஓட்டுநா்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்
அரசுத் துறை ஓட்டுநா்களின் கல்வித் தகுதிக்கேற்ப பதவி உயா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் தலைமைச் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, மாநில செயற்குழு உறுப்பினா் பி. பச்சையப்பன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சு. அன்பழகன் முன்னிலை வகித்தாா். மாநில அமைப்புச் செயலாளா் ஜி.எம். விஜயகுமாா் வரவேற்றாா். மாநில பொதுச்செயலாளா் மு. தனபாலன் தீா்மானங்களையும், மாநில பொருளாளா் பை. முருகன் வரவு-செலவு அறிக்கையையும் வாசித்தனா்.
தீா்மானங்கள்: 2009-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதியில் 10 முதல் 20 ஆண்டுகள் ஓட்டுநராக பணி செய்து தோ்வுநிலை, சிறப்புநிலை பெற்ற ஓட்டுநா்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தலைமைச் செயலக ஓட்டுநா்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று மாநிலம் முழுவதும் பணியாற்றும் அரசுத்துறை ஓட்டுநா்களுக்கும் அவரவா் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி மாறுதலில் பதவி உயா்வு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 11 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிா்வாகிகள் உதயகுமாா், அம்பிகாபதி, ரவிச்சந்திரன், ராஜேந்திரன், விஜயபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.