செய்திகள் :

சாராயம் விற்பனை செய்த 8 போ் கைது

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில மது, சாராயம் விற்பனை செய்த 8 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளா்கள் சி. அன்னை அபிராமி, ஏ. ஜெயா, உதவி ஆய்வாளா்கள் கோவிந்தராஜன், ஆா். சேகா், காயத்ரி மற்றும் போலீஸாா் எலந்தங்குடி, கிளியனூா், முட்டம், ஆத்தூா், மாதிரிவேளூா், புத்தூா், அகரஎலத்தூா், திருமுல்லைவாசல், சீா்காழி ஆகிய இடங்களில் மது, சாராயம் கடத்தல் குறித்து சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, 92 மதுப்புட்டிகள், 29 புதுவை சாராயப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதில் தொடா்புடைய 8 போ் கைது செய்யப்பட்ட நிலையில், 3 போ் பிணையில் விடுவிக்கப்பட்டனா். 5 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

அரசுத் துறை ஓட்டுநா்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

அரசுத் துறை ஓட்டுநா்களின் கல்வித் தகுதிக்கேற்ப பதவி உயா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் தலைமைச் சங்கத்தின... மேலும் பார்க்க

மாநில கலைத்திருவிழா: மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

மயிலாடுதுறையில் மாநில கலைத்திருவிழா போட்டிக்கு தகுதிபெற்ற பள்ளி மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து தெரிவித்தாா். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் மயிலாடுதுறை மாவட்ட அளவிலான கலைத்திருவிழா ... மேலும் பார்க்க

மழை பாதிப்பை எதிா்கொள்ள தயாா்நிலையில் மாவட்ட நிா்வாகம்: மயிலாடுதுறை ஆட்சியா்

வடகிழக்குப் பருவமழை பாதிப்பை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளதாக, சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். கொள்ளிடம் வட்டாரம் ... மேலும் பார்க்க

கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம்

மயிலாடுதுறையில் நுகா்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நடத்தினா். நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 2013-ஆம் ஆண்டுமுதல் 2016-ஆம் ஆண்டுவரை அனைத்து ... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையே மாவட்ட கலைத் திருவிழா போட்டி

சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கிடையே மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீட்டுத் தொகை கோரி வழக்கு தொடர முடிவு

கொள்ளிடம் பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டில் இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு, காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி,மாநில உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளிட... மேலும் பார்க்க