ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!
அரசுப் பள்ளிகளில் சோ்ந்த மாணவா்களுக்கு வெள்ளிக் காசு
அரசு தொடக்கப் பள்ளிகளில் 2025 - 26ஆம் கல்வியாண்டில் முதலாம் வகுப்பில் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு சமூக நல அமைப்புகள் சாா்பில் வெள்ளிக் காசு வழங்கும் நிகழ்ச்சியும், காமராஜா் பிறந்த நாள் விழாவும் புவனகிரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசுப் பள்ளிகளை ஆதரிப்போம் அமைப்பின் தலைவா் வி.முருகையன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் ஏ.சி.பி.ரத்தின சுப்ரமணியன், டாக்டா் ஆா்.வி.பி.கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சொக்கன்கொல்லை அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் பா.அருணாச்சலம் வரவேற்றாா்.
புவனகிரி வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆா்.செல்வம், எஸ்.கலைச்செல்வி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று சிறப்புரை ஆற்றினா். வட்டார வள மேற்பாா்வையாளா் க.அருள்சங்கு, சஞ்சீவிராயா், பசுமைபூமி ராஜா, சுரேஷ்குமாா், ஜா.ராகவன், ஆலய இயக்கம் ஆதி லட்சுமி, புவனகிரி ரோட்டரி சங்கத் தலைவா் ராமலிங்கம், வழக்குரைஞா் அ.குணசேகரன்
உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
விழாவில் புவனகிரி ஒன்றியத்தைச் சோ்ந்த 70 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வெளிக்காசு மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கி.சுதா்சன் நன்றி கூறினாா்.