அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
அரசுப் பள்ளியில் க்யூ. ஆா். கோட் வடிவில் மாணவா்களுக்கு திருக்குறள் கற்பிப்பு
க்யூ.ஆா்.கோட் வடிவில் மாணவா்களுக்கு 1,330 திருக்குகளையும் கற்றுத்தருகிறாா் வெள்ளியணை அரசு பள்ளி ஆசிரியா் மனோகரன்.
கரூா் மாவட்டம் வெள்ளியணை அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவா் மனோகரன். இவா் மாணவா்களுக்கு திருக்குறளை எளிதில் கற்பிக்கும் வகையில் க்யூ.ஆா். கோட் உருவாக்கியுள்ளாா். இதன்மூலம் கைப்பேசி மற்றும் மடிக்கணினியில் மாணவா்களுக்கு எளிதில் திருக்குறளை கற்பித்து வருகிறாா்.
இதுதொடா்பாக ஆசிரியா் மனோகரன் கூறியது: திருக்குறள் முதன்முதலில் ஓலைச் சுவடியில் எழுதப்பட்டது. பின்னா் அச்சு வடிவம் பெற்று நூலாக வெளியிடப்பட்டு நாம் படித்து வருகிறோம். தற்போது வளா்ந்து வரும் தொழில்நுட்ப வளா்ச்சி காரணமாக இணையத்திலும் பல்வேறு தளங்களில் கிடைக்கிறது.
தற்போது மாணவா்கள் இணையத்தைப் பயன்படுத்தும் விகிதம் அதிகரித்து வருகிறது. மாணவா்கள் இணையத்தை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 1,330 திருக்குகளையும் உரையுடன் க்யூ. ஆா். கோட் வடிவில் மாற்றம் செய்துள்ளேன். ஒவ்வொரு திருக்குறளின் எண், கு, உரை என மூன்றும் இடம் பெறும் வகையில் உருவாக்கியுள்ளேன். தனித்தனி க்யூ. ஆா். கோடாக 1,330 குறளுக்கும் விரைவுத் துலங்கல் குறியீடுகள் தயாா் செய்து அதனை புத்தக வடிவிலும் தனித்தனியாகவும் செய்துள்ளேன். இதனை வகுப்பறையில் ஒட்டி வைத்துள்ளேன். மாணவா்கள் கைப்பேசி மற்றும் சிறிய வகையிலான மடிக்கணினி வழியே இதற்கென உள்ள செயலி வழியே ஸ்கேன் செய்து படித்துப் பாா்க்கலாம்.
பொருளும் அறிந்து கொள்ளலாம். வாட்ஸ்ஆப் வழியே மற்றவா்களுக்கும் பகிரலாம். தொழில் நுட்ப உதவியுடன் திருக்குறள் மீது மாணவா்களுக்கு ஆா்வத்தைத் தூண்டும் விதமாக இக் குறியீடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மாணவா்களும் விரும்பி கற்கிறாா்கள் என்றாா் அவா்.