செய்திகள் :

அரிட்டாபட்டி: `ஐநூற்றுப் பெருந்தெரு வணிகத் தலமாக..!' - தொல்லியல் அறிஞர்கள் சொல்வது என்ன?

post image
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க கூடாது என்று மூத்த தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் ஒருங்கிணைப்பில் தமிழகத்தின் மூத்த தொல்லியல் அறிஞர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
அரிட்டாபட்டி

அதில், "மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள அரிட்டாபட்டி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சுவடுகளைக் கொண்டதாகும். இங்குள்ள கழிஞ்ச மலையில் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு தமிழி (Tamil Brahmi) கல்வெட்டுகள் உள்ளன.  இது ஒரு தொன்மையான சமணத் தலமும் கூட., கி.பி 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு குடைவரை சிவன் கோயிலும் உள்ளது. லகுலீசர் சிற்பம் ஒன்றும் குடைவிக்கப்பட்டுள்ளது. முன்னர் கூறிய தமிழி கல்வெட்டுகள் காணப்படும் இடத்தின் அருகிலேயே சுமார் 10 அடி தூரத்தில் மலையில் ஒரு சமணத்தீர்த்தங்கரர் சிற்பம் வெட்டப்பட்டு அதன் கீழ் அதனை வெட்டு வித்தவர் பெயரும் ஊரின் பழமையான பெயரும் காணப்படுகிறது. இக்கல்வெட்டு பழமையான வட்டெழுத்தில் உள்ளது.

‘திருப்பிணையன் மலை பொற்கோட்டுக் காரணத்தார் பேரால் அச்சணந்தி  செய்வித்தத் திருமேனி பாதிரிக் குடியார் ரட்சை‘ என்பது அந்தக் கல்வெட்டின் வாசகம் ஆகும். இக்கல்வெட்டின்படி இவ்வூரின் பெயர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாதிரிக்குடி என அழைக்கப்பட்டது என்பதும், இம்மலையின் பெயர் திருப்பிணையன் மலை என்றும் இச்சிலையைச் செய்ய வைத்தவர் அச்சணந்தி என்ற சமணத் துறவி என்பதும் அறியப்படுகிறது.

இத்துடன் இவ்வூரில் கி.பி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயில் ஒன்றும் இருந்து அழிந்துள்ளது.  இங்குள்ள கட்டுமான கற்களில் கி.பி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.  இக்கல்வெட்டு மூலம் இவ்வூர் அக்காலத்தில் ஐநூற்றுப் பெருந்தெரு  என்ற பெயரில் ஒரு வணிகத் தலமாக இருந்தது வெளிப்படுகிறது.

அரிட்டாபட்டி

இதன் பின்னர் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமலை நாயக்கர் கால செப்பேடும் இருந்துள்ளது. இதில் இவ்வூரின் காவல் முக்கியத்துவம், ராணுவ நடவடிக்கை போன்ற செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அரிட்டாபட்டிக்கு சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலேயே மாங்குளம் என்னும் ஊரின் மலைக்குகையில் ஆறு தமிழி கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளது, 1882 ஆண்டிலேயே ராபர்ட் சீவல் என்னும் ஆங்கிலேயே அறிஞரால் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுகளில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்டதாக சங்க இலக்கியங்களில் பேசப்படும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டுகளில் நந்தஸ்ரீ குவன் என்னும் சமண துறவி பெயரும் வெள்ளறை நிகமம் என்னும் வணிக நிறுவனத்தின் பெயரும் இடம் பெற்றது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இம்மலையின் சுற்று வளாகத்தில் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் நிலவுகிறது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவமும், பாரம்பரிய பெருமையும் நிறைந்த அரிட்டாபட்டியில் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முயற்சியை தொல்லியல் ஆய்வாளர்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

மதுரை அரிட்டாபட்டி

ஒருபுறம் வரலாற்று சின்னங்களைப் பாதுகாப்பதற்குப் பல கோடிகளை செலவழிக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் வளர்ச்சி என்ற முனைப்பில் இத்தகைய வரலாற்றுச் சின்னங்களுக்கு ஊறு நேரும் வகையிலும், என்றென்றைக்கும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய வரலாற்று ஆதாரங்கள் அழிக்கப்படும் வகையிலும் செயல்படுத்தப்படும் முயற்சியை தொல்லியல் ஆய்வாளர்களாகிய நாங்கள் கண்டிக்கிறோம். எனவே, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அரிட்டாபட்டி பகுதியில் அதன் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்; விமானம், ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி!

வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் தென்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் டெல்லியில் அருகில் இருப்பவர்களைக்கூட பார்க்க முடியவில்லை. மோசமான பனிமூட்டத்தால் டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

முதுமலை: தாய்ப் பாலுக்கு மாற்றாக லேக்டொஜென், கதகதப்புக்கு ஹீட்டர்; எப்படி இருக்கிறது குட்டி யானை?

கோவை மாவட்டம் துடியலூர், வரப்பாளையம் பகுதியில் கடந்த வாரம் பெண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. அதன் அருகில் பச்சிளம் பெண் யானைக் குட்டி ஒன்று பரிதவித்துக் கொண்டிருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது... மேலும் பார்க்க

ஒரே துணை; ஒரேயொரு முட்டை; சடலங்களே உணவு... கொத்துக் கொத்தாக இறந்துபோன பாறு கழுகுகளின் கதை!

வயிறு புடைக்க இறந்த மாட்டின் இறைச்சியை உண்டுவிட்டு மரக்கிளையில் வரிசையாக உட்கார்ந்துக்கொண்டிருந்த பாறு கழுகுகள், கண்கள் சொருகி, வாயில் நீர் வடிய ஒவ்வொன்றாக மரக்கிளைகளில் இருந்து கீழே பொத் பொத்தென்று வ... மேலும் பார்க்க

கோவை : `மற்ற யானை கூட்டங்கள் ஏற்கவில்லை' - தாயை இழந்த குட்டி யானை முதுமலை முகாமுக்கு அனுப்பி வைப்பு

கோவை மாவட்டம், துடியலூர் அருகேவரப்பாளையம் பகுதியில்கடந்தவாரம்ஒருபெண் யானை உயிரிழந்தது. உயிரிழந்த பெண் யானை அருகிலேயேபிறந்து சில மாதங்களே ஆன அதன் குட்டி பெண்யானை சுற்றித் திரிந்தது.கோவை யானைஅம்மாவின் இ... மேலும் பார்க்க

பந்தலூர்: தொடர் கண்காணிப்பு... `அரிசி பிரியர்’ புல்லட்டை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

அரிசி சுவைக்கு பழக்கப்படுத்தப்பட்ட இளம் ஆண் யானை ஒன்று நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை சேதப்படுத்தி அரிசியை உட்கொண்டு வந்தது. கடந்த சில தினங்களில் மட்டும் 30- க்கும் ... மேலும் பார்க்க

தாயை இழந்த குட்டி யானை; ஏற்க மறுக்கும் பிற யானைகள்; கூட்டத்துடன் சேர்க்கப் போராடும் வனத்துறை - Album

பரிதமாக உயிழந்த தாய் யானை பரிதமாக உயிழந்த தாய் யானையை பிரேத பரிசோதனைக்கு எடுத்துசெல்லும் வனத்துறையினர் பரிதமாக உயிழந்த தாய் யானையை பிரேத பரிசோதனைக்கு எடுத்துசெல்லும் வனத்துறையினர் பரிதமாக உயிழந்த தாய்... மேலும் பார்க்க