நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவு!
முதுமலை: தாய்ப் பாலுக்கு மாற்றாக லேக்டொஜென், கதகதப்புக்கு ஹீட்டர்; எப்படி இருக்கிறது குட்டி யானை?
கோவை மாவட்டம் துடியலூர், வரப்பாளையம் பகுதியில் கடந்த வாரம் பெண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. அதன் அருகில் பச்சிளம் பெண் யானைக் குட்டி ஒன்று பரிதவித்துக் கொண்டிருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தாயை இழந்து தவித்த குட்டியை அருகில் இருக்கும் யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. வேறு வழியின்றி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு யானைக் குட்டியைக் கொண்டு செல்லும் முடிவை எடுத்தது வனத்துறை. தாயைப் பிரிந்த யானைக் குட்டிகளைப் பராமரிக்கும் சிறப்பு அனுபவம் கொண்ட முகாமில் பழங்குடி பாகன்களின் அரவணைப்பில் 24 மணி நேரமும் கூடுதல் கவனத்துடன் பராமரித்து வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த வனத்துறையினர்," பிறந்து ஒரு மாதமே ஆன பெண் யானைக் குட்டியின் உடல் நிலை நன்றாக இருக்கிறது. கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாகன்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறது. அடிக்கடி பசி எடுக்கும் என்பதால் லேக்டொஜென் வழங்கப்படுகிறது.
தண்ணீர், குளுக்கோஸ் போன்றவையும் தேவைக்கு ஏற்ப கொடுக்கப்படுகிறது. பனி காலம் என்பதால் கதகதப்பு தர க்ராளுக்குள் ஹீட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை, மாலை நடைப்பயிற்சியும் அளிக்கிறோம். தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.
VIKATAN AUDIO STORIES:
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...