நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவு!
கோவை : `மற்ற யானை கூட்டங்கள் ஏற்கவில்லை' - தாயை இழந்த குட்டி யானை முதுமலை முகாமுக்கு அனுப்பி வைப்பு
கோவை மாவட்டம், துடியலூர் அருகே வரப்பாளையம் பகுதியில் கடந்த வாரம் ஒரு பெண் யானை உயிரிழந்தது. உயிரிழந்த பெண் யானை அருகிலேயே பிறந்து சில மாதங்களே ஆன அதன் குட்டி பெண் யானை சுற்றித் திரிந்தது.
அம்மாவின் இழப்பால் எங்கு செல்வது என்று தெரியாமல் அந்தக் குட்டி யானை பரிதவித்தது. வனத்துறையினர் உயிரிழந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்து உடலை அடக்கம் செய்தனர்.
மேலும் குட்டி யானையை மீட்டு அது தன் அம்மாவுடன் ஏற்கெனவே சுற்றிய யானைக் கூட்டத்துடன் இணைப்பதற்கு முயற்சி செய்தனர். வரப்பாளையம், பொன்னூத்தமன் கோயில் மலையைச் சுற்றி மொத்தம் மூன்று யானை கூட்டங்கள் இருந்தன.
அந்த கூட்டங்களுடன் குட்டி யானையை சேர்ப்பதற்கு வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி செய்தனர். ஆனால் அந்த மூன்று கூட்டங்களுமே குட்டி யானையை சேர்க்கவில்லை.
வனத்துறையினர் ஒரு வாரமாக குட்டி யானையை பராமரித்து, தொடர்ந்து பல்வேறு யானை கூட்டங்களுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதன் காரணமாக குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு அனுப்பி பராமரிக்க முடிவு செய்தனர்.
அதன்படி வனத்துறையினர் குட்டி யானையை இன்று கோவையில் இருந்து முதுமலைக்கு கொண்டு சென்றனர்.