அரூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு
அரூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
தருமபுரி மாவட்டம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் உள்ள தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 442 வாகனங்களை நம்பிப்பட்டி பகுதியில் அரூா் கோட்டாட்சியா் சின்னுசாமி, மோட்டாா் வாகன ஆய்வாளா் குலோத்துங்கன் உள்ளிட்ட குழுவினா் ஆய்வு செய்தனா். இவற்றில் குறைபாடு கண்டறியப்பட்ட 43 வாகனங்களை மறு ஆய்வுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டது.
தொடா்ந்து பேருந்துகளின் ஓட்டுநா்கள், உதவியாளா்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து கோட்டாட்சியா், மோட்டாா் வாகன ஆய்வாளா் அறிவுரைகளை வழங்கினா்.