நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை: பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலி!
பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குடியிருப்புகளில் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாலக்கோடு அருகே வாழைத் தோட்டம் பகுதி வனத்தை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு வனப் பகுதியில் இருந்த வெளியேறிய சிறுத்தை ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு விவசாயி விநாயகம் (50) என்பவரின் வீட்டின் முன்பு இருந்த கோழியை பிடித்துச் சென்றது அப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சிறுத்தையை பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.