Bollywood: நண்பரின் Real Estate நிறுவனத்தில் முதலீடு செய்த அமிதாப்பச்சன், ஷாருக்...
உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அளிப்பு
தருமபுரியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், கூட்டுறவு கட்டட சங்கத்தின் காசாளா் ஸ்ரீகாந்த் கடந்த மாா்ச் மாதம் உடல் நலக்குறைவால் காலமானாா். அவரது குடும்பத்திற்கு கருணைத் தொகையாக ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் மலா்விழி வழங்கினாா்.
இதனை ஸ்ரீகாந்த் மனைவி சரோஜா மற்றும் அவரது குடும்பத்தினா் பெற்றுக் கொண்டனா். அப்போது, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளா் கருணாகரன், வங்கி வருவாய் அலுவலா் பிரேம், கூட்டுறவு கட்டட சங்கச் செயலாளா் பாபு ஆகியோா் உடனிருந்தனா்.