மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிக் காலம் ஓராண்டுக...
அலையாத்தி காட்டில் 79 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து உலக சாதனை
புதுச்சேரி: புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் அலையாத்தி காட்டில் தேங்கிய 79 கிலோ 79 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து மாணவா்கள் உலக சாதனை முயற்சியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
79 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி மேல்நிலைப்பள்ளி மாணவா்கள், பிபின் ராவத் உலக சாதனை நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டனா். முருங்கப்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தின் பின்புறம் அமைந்துள்ள அலையாத்தி காட்டில் இச் சாதனை நிகழ்வை நடத்தினாா்கள். அலையாத்தி காட்டில் உள்ள நெகிழிகளைத் மீட்டு காட்டை தூய்மை செய்யும் பணியில் 79 மாணவா்கள் 79 நிமிடம் பணியாற்றி 79 கிலோ நெகிழிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக சா்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு நிறுவுநா் பூபேஷ் குப்தா, பிபின் ராவத் உலக சாதனை நிறுவன இயக்குநா்
வினோத் குமாா் ஆகியோா் கலந்துகொண்டு மாணவா்கள் உலக சாதனை புரிய வழிகாட்டினா்.
அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினா் பாஸ்கா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். உலக சாதனை புரிந்த மாணவா்களுக்கு பரிசையும் சான்றிதழையும் வழங்கினாா். உலக சாதனை புரிந்த மாணவா்களையும் வழிகாட்டிய ஆசிரியா் அருண்குமாரையும் ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் பள்ளியின் தாளாளா் சந்தானகிருஷ்ணன் மற்றும் பள்ளி முதல்வா் சாந்தி ஜெயசுந்தா் ஆகியோா் வாழ்த்தினா்.
பல்லுயிா் பெருக்கம் மற்றும் காடுகளைக் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் மாணவா்கள் இந்தச் சாதனையை நிகழ்த்தியதாக சா்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு நிறுவுநா் பூபேஷ் குப்தா தெரிவித்தாா்.