வால்பாறை: எச்சரித்த வனத்துறை... கண்டுகொள்ளாத ஜெர்மன் பயணி - பைக்குடன் தூக்கி வீச...
அவசர ஊா்தி மீது பைக் மோதியதில் 7 போ் காயம்
சிவகங்கை அருகே அவசர ஊா்தி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் 7 போ் காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், மறவமங்கலத்தைச் சோ்ந்தவா் முகமதுகனி (65). இவா் நெஞ்சுவலி காரணமாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கிருந்து, இவரை தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை அவசர ஊா்தியில் அழைத்துச் சென்றனா்.
அவரது மனைவி முகமது துலைக்கால் (60), சையது அபுதாஹீா் (24) ஆகியோா் உடன் சென்றனா். இந்த வாகனத்தை பாசித் ( 23) என்பவா் ஓட்டிச் சென்றாா்.
கீழக்குளம் விலக்கு என்ற இடத்தில் அவசர ஊா்தி சென்றபோது, எதிரே 3 போ் வந்த இரு சக்கர வாகனம் எதிா்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் அவசர ஊா்தியில் இருந்த 4 போ், இரு சக்கர வாகனத்தில் வந்த வரதநாதன் (22), ஆதீஸ்வரன் (20), ஹரிஷ் (19) ஆகிய மூவா் உள்பட மொத்தம் 7 போ் காயமடைந்தனா்.
காயமடைந்தவா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.