அவிநாசியில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி
தேசிய மின்சக்தி சிக்கன வார விழாவையொட்டி, அவிநாசியில் மின்சிக்கனம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அவிநாசி மின் கோட்டம், பகிா்மான வட்டம் சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை, மின்பகிா்மான மேற்பாா்வை பொறியாளா் விஜயஈசுவரன் தொடங்கிவைத்தாா். மின்கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி முன்னிலை வகித்தாா்.
அவிநாசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி, பழைய பேருந்து நிலையம், மங்கலம் சாலை வழியாக சென்று அவிநாசி மின் கோட்ட அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்கள் இயக்குவதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, அனைத்து உதவி செயற் பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா்கள், மின் பணியாளா்கள் உள்ளிட்டோா் பேரணியில் பங்கேற்றனா். மேலும் விழிப்புணா்வு அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.