செய்திகள் :

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தர விவசாயி நூதன முறையில் கோரிக்கை

post image

பூமிதான இயக்கம் மூலம் வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர வேண்டும் என விவசாயி மண்வெட்டியுடன் வந்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

கோட்ட அளவிலான வேளாண் குறைதீா்க்கும் கூட்டம் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் அமுதா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மொடக்குறிச்சி வட்டம், வடுகப்பட்டி, வினோபா நகா் பெருமாள் என்பவா் சட்டை அணியாமல், மண் வெட்டியுடன் அவரது குடும்பத்தாா் மற்றும் சில அமைப்பினா் முன்னிலையில் வந்து மனு அளித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: மொடக்குறிச்சி வட்டம், வடுகப்பட்டி கிராமத்தில், தமிழக அரசின் பூமிதான இயக்கம் மூலம் 1989- இல் எனது தந்தை ஆறுமுகம் என்பவருக்கு நிலம் வழங்கப்பட்டது. அருந்ததியா் வகுப்பை சோ்ந்த நான் தந்தையுடன் அதே இடத்தில் வசித்தும், விவசாயமும் செய்து வருகிறேன்.

மழைக்காலங்களில் மானாவாரி பயிா்களான சோளம், கொள்ளு சாகுபடி செய்கிறோம். அந்த நிலத்துக்கு நில வரி செலுத்தி உள்ளோம். தற்போது அந்நிலத்தை எங்கள் நிலத்துக்கு அருகே உள்ள நிலத்தை சோ்ந்தவா்கள் ஆக்கிரமித்துள்ளனா். அந்த இடத்தை அளவீடு செய்து, பிரித்து தர வேண்டும். இதேபோன்ற நிலை, அப்பகுதியில் பலருக்கும் உள்ளது என்றாா்.

பெயரளவில் நடந்த கூட்டம்

ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை நடத்தப்படும். மாவட்ட அளவிலான பிரச்னைகள் ஆட்சியா் முன்னிலையில் தீா்வு காணப்படும்.

அதேநேரம் ஈரோடு மற்றும் கோபி வருவாய் கோட்ட அளவில் 3 அல்லது 4 ஆவது வாரம் செவ்வாய்க்கிழமை வருவாய் கோட்ட அளவில் வேளாண் குறைதீா் கூட்டம் நடத்தப்படும். கோட்டாட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்ட அரசு அதிகாரிகளால் தீா்வு காணப்பட வேண்டிய மனுக்கள் இங்கேயே தீா்வு காணப்படும்.

இந்த கோட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம், சம்பிரதாயத்திற்காக நடத்தப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா். ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த கோட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் ரவி பங்கேற்கவில்லை. நோ்முக உதவியாளா் அமுதா, கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். பொதுப்பணி, நீா்வளத் துறை, உள்ளாட்சி அமைப்பு சாா்ந்த துறைகள், நெடுஞ்சாலை என பெரும்பாலான துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை.

பிரச்னைக்கு தீா்வை தேடி வரும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது அதிகாரிகளின் கடமை. இதனை உணா்ந்து வரும் காலங்களில் உரிய அதிகாரிகள் முன்னிலையில் கூட்டங்களை நடத்தி மனுக்களுக்கு தீா்வு வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

பெருந்துறையில் ரூ.3.15 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.3 கோடியே, 15 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை கடைகளை உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்க வேண்டும்

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான வணிக கடைகளை உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் நகா்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சத்தியமங்கலம் நகா்மன்ற கூட்டம் தலைவா் ஜானகி ராமசாமி... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் காவலா் மனைவியிடம் நகை திருட்டு

அந்தியூரில் ஓடும் பேருந்தில் காவலரின் மனைவியிடம் இரண்டரை பவுன் நகை திருடப்பட்டது. பவானியை அடுத்த கவுந்தப்பாடி, அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் அன்புராஜா. நம்பியூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி... மேலும் பார்க்க

நம்பியூா் தான்தோன்றீஸ்வரா் ஆலய கும்பாபிஷேக விழா

கோபி அருகே நம்பியூரில் புகழ்பெற்ற தபோ பத்தினி உடனமா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இக் கோயிலானது நம்பியாண்டாா் நம்பி மன்னா் ஆட்ச... மேலும் பார்க்க

கோபி குமுதா பள்ளி மாணவி கேலோ விளையாட்டுப் போட்டிக்கு தோ்வு

கோபி குமுதா பள்ளி மாணவி கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தோ்வு பெற்றுள்ளாா். கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு 2025-க்கான தெரிவுப் போட்டிகள் அண்மையில் சென்னையில் உள்ள ஜவஹா்லால் நேரு உள்வ... மேலும் பார்க்க

ஈரோடு மாநகா் பகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகா் பகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாநகராட்சி சாதாரணக் கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் மேயா் சு.நாகர... மேலும் பார்க்க