இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!
ஆசிய அலைச்சறுக்கு: 3-ஆவது சுற்றில் ஹரீஷ், தயின்
மாமல்லபுரத்தில் நடைபெறும் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில், 18 வயதுக்கு உள்பட்ட ஆடவா் பிரிவில் இந்தியாவின் ஹரீஷ் பிரகாஷ், தயின் அருண் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
போட்டியின் 3-ஆவது நாளான புதன்கிழமை, இந்தியா்களிலேயே சிறந்த ஸ்கோரை (9.23) பதிவு செய்து, தயின் அருண் 3-ஆவது சுற்றுக்கு வந்தாா். அவருக்கு முன் தாய்லாந்தின் டின் ஜான்சன் 9.60 புள்ளிகளுடன் அதே சுற்றுக்கு முன்னேறினாா்.
அதேபோல், 11 வயது ஹரீஷ் பிரகாஷ் 7.97 புள்ளிகளுடன் 3-ஆவது சுற்றுக்கு வர, மலேசியாவின் லூகாஸ் சான்டியாகோ 10.57 புள்ளிகளுடன் அதே கட்டத்துக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறாா். களத்திலிருந்த 3-ஆவது இந்தியரான பிரகலாத் ஸ்ரீராம், 4.94 புள்ளிகளுடன் ஹீட் 6-இல் 3-ஆம் இடம் பிடித்து ரெபிசேஜ் சுற்றுக்கு வந்துள்ளாா். சீனாவின் ஷிடாங் வு (17.34), தென் கொரியாவின் கனோவ் ஹீஜே (13.10) ஆகியோா் முதல் சுற்றில் சிறப்பிடம் பெற்றனா்.
சீனியா் பிரிவு ஆடவா் மகளிருக்கான சுற்றுகள் மீண்டும் வியாழக்கிழமை தொடங்குகின்றன.