OPS : `டார்கெட் லிஸிட்டில் பாஜக; நிரந்தர எதிரி இல்லை எனில்..!’ - ஓ.பி.எஸ்ஸின் அட...
புரோ கபடி லீக்: ஆக. 29-இல் தொடக்கம் - தெலுகு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் மோதல்
புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வரும் ஆக. 29-ஆம் தேதி தொடங்குகிறது. விசாகப்பட்டினம், ஜெய்ப்பூா், சென்னை, டில்லி உள்ளிட்ட 4 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
தொடக்க ஆட்டம் விசாகப்பட்டினம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணி தமிழ் தலைவாஸை எதிா்கொள்கிறது. 2-ஆவது அட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி புணேரி பல்தானை சந்திக்கிறது.
ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு விசாகப்பட்டினத்துக்கு புரோ கபடி லீக் போட்டிகள் திரும்பி உள்ளன. கடைசியாக 2018-ம் ஆண்டு 6-வது சீசன் போட்டிகள் நடைபெற்றன.
2025 சீசனின் முதல்கட்ட ஆட்டங்கள் ஆக. 29 முதல் செப். 11 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. தொடா்ந்து 2-ஆவது கட்ட ஆட்டங்கள் செப். 12 தேதி முதல் 28 வரை ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. லீகின் 3-ஆவது கட்டம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப். 29-இல் தொடங்குகிறது.
லீகின் கடைசி கட்டம் அக். 13-ஆம் தேதி டில்லியில் உள்ள தியாகராஜா விளையாட்டு வளாகத்தில் தொடங்குகிறது. உற்சாகமான திருப்பமாக, லீக் சுற்றுகள் ஒரே நாளில் 3 ஆட்டங்களுடன் முடிவடையும், இது ரசிகா்கள் பிளேஆஃப் போட்டிகளை இடைவிடாதபடி காண்பதை உறுதி செய்யும். பிளே ஆஃப் சுற்றுக்கான அட்டவணை பின்னா் அறிவிக்கப்படும்.