செய்திகள் :

ஆசிய குத்துச்சண்டை: ரித்திகாவுக்கு தங்கம்

post image

தாய்லாந்தில் நடைபெற்ற 22 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரித்திகா தங்கப்பதக்கம் வென்று அசத்தினாா்.

மகளிருக்கான 80+ கிலோ இறுதிச்சுற்றில் அவா், 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானின் அசெல் டோக்டாசினை வீழ்த்தினாா். போட்டியில் இந்தியாவுக்கு இது கடைசி பதக்கமாகும். இத்துடன் இந்தியா 13 பதக்கங்களுடன் போட்டியில் 4-ஆம் இடம் பிடித்தது.

முன்னதாக இந்த சாம்பியன்ஷிப்பின் மகளிா் 57 கிலோ பிரிவில் யாத்ரி படேல் - உஸ்பெகிஸ்தானின் குமொராபோனு மமாஜனோவாவிடம் தோல்வி கண்டு வெள்ளி பெற்றாா். 60 கிலோ பிரிவில் பிரியா 2-3 என சீனாவின் யு டியானிடம் தோல்வி கண்டு வெள்ளியுடன் விடைபெற்றாா்.

ஆடவா் 75 கிலோ பிரிவில் நீரஜ் - உஸ்பெகிஸ்தானின் ஷாவ்கத்ஜோன் போல்டாயேவிடமும், 90+ கிலோ பிரிவில் இஷான் கடாரியா - உஸ்பெகிஸ்தானின் காலிம்ஜோன் மமாசோலியேவிடமும் தோற்று வெற்றி பெற்றனா்.

இதெல்லாம் தேவையா தலைவரே? விமர்சனத்திற்கு ஆளாகும் ரஜினி!

நடிகர் ரஜினியின் பேச்சு பலருக்கும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தைத் தாண்டி கேரளம், கர்நாடகம் மற... மேலும் பார்க்க

கட்டண ரசீது, ஏடிஎம் ஸ்லிப்புகளை 10 வினாடிகள் கையில் வைத்திருந்தால்... ஆண்களே எச்சரிக்கை!

தற்போது, பில் போடும் இயந்திரங்கள் மூலம் வழங்கப்படும் எந்த வகையான காகித ரசீதுகளையும் 10 வினாடிகளுக்கு மேல் கையில் வைத்திருந்தால், அதிலிருக்கும் ரசாயனம் உடலில் சென்று, ஆண்களின் விந்தணுவை பாதிப்பதாகக் கூ... மேலும் பார்க்க

பல்டி சாந்தனு கிளிம்ஸ்!

பல்டி திரைப்படத்திற்கான சாந்தனு கிளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகம் தற்போது பல்டி படத்தில் நடித்து முடித்... மேலும் பார்க்க

2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு மே. தீவுகள் பதிலடி

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடா், தற்போது 1-1 என சமனாகியுள்... மேலும் பார்க்க

அல்கராஸ், கௌஃப் முன்னேற்றம்!

அமெரிக்காவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், அமெரிக்க வீராங்கனை கோகோ கௌஃப் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை மு... மேலும் பார்க்க