செய்திகள் :

2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு மே. தீவுகள் பதிலடி

post image

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடா், தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 37 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் சோ்க்க, மழை காரணமாக அதன் இன்னிங்ஸ் அப்படியே முடித்துக்கொள்ளப்பட்டது. பின்னா் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 35 ஓவா்களில் 181 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட, அந்த அணி 33.2 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பந்துவீச்சை தோ்வு செய்தது. பாகிஸ்தான் இன்னிங்ஸில் சயிம் அயுப் 23, அப்துல்லா ஷஃபிக் 26, பாபா் ஆஸம் 0, கேப்டன் முகமது ரிஸ்வான் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஹுசைன் தலத் 31, சல்மான் அகா 9, முகமது நவாஸ் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, இன்னிங்ஸ் முடிவில் ஹசன் நவாஸ் 3 சிக்ஸா்களுடன் 36, ஷாஹீன் அஃப்ரிதி 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் ஜேடன் சீல்ஸ் 3, ஜெடாயா பிளேட்ஸ், ஷமாா் ஜோசஃப், குடாகேஷ் மோட்டி, ராஸ்டன் சேஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 181 ரன்களை நோக்கி விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் பிராண்டன் கிங் 1, எவின் லீவிஸ் 7, கீசி காா்டி 16, கேப்டன் ஷாய் ஹோப் 32, ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

முடிவில், ராஸ்டன் சேஸ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 49, ஜஸ்டின் கிரீவ்ஸ் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பாகிஸ்தான் பௌலா்களில் ஹசன் அலி, முகமது நவாஸ் ஆகியோா் தலா 2, அப்ராா் அகமது 1 விக்கெட் வீழ்த்தினா்.

நாளுக்கு நாள் பிரம்மாண்டம்... மம்மூட்டி - மோகன்லால் படம் குறித்து இயக்குநர்!

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்து இயக்குநர் பேசியுள்ளார். மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வர... மேலும் பார்க்க

சோனியா அகர்வால் வருகை.... விறுவிறுப்படையும் கயல் தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் திடீர் திருப்பமாக நடிகை சோனியா அகர்வால், இந்தத் தொடரில் இணைந்துள்ளார்.தந்தையை இழந்த கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணைச் சுற்றியே இத்தொடரின் கதை நகர்... மேலும் பார்க்க

8 ஆண்டுகள்.. 5 குழந்தைகள்..! நீண்டநாள் காதலியைக் கரம்பிடிக்கிறார் ரொனால்டோ!

போர்ச்சுகல் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்டநாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை கரம்பிடிக்கவுள்ளார்.போர்ச்சுகீசிய கால்பந்து ஜாம்பவானும், அல் நசீர் அணியின் நட்சத்திரமுமான கிற... மேலும் பார்க்க

இதெல்லாம் தேவையா தலைவரே? விமர்சனத்திற்கு ஆளாகும் ரஜினி!

நடிகர் ரஜினியின் பேச்சு பலருக்கும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தைத் தாண்டி கேரளம், கர்நாடகம் மற... மேலும் பார்க்க

கட்டண ரசீது, ஏடிஎம் ஸ்லிப்புகளை 10 வினாடிகள் கையில் வைத்திருந்தால்... ஆண்களே எச்சரிக்கை!

தற்போது, பில் போடும் இயந்திரங்கள் மூலம் வழங்கப்படும் எந்த வகையான காகித ரசீதுகளையும் 10 வினாடிகளுக்கு மேல் கையில் வைத்திருந்தால், அதிலிருக்கும் ரசாயனம் உடலில் சென்று, ஆண்களின் விந்தணுவை பாதிப்பதாகக் கூ... மேலும் பார்க்க

பல்டி சாந்தனு கிளிம்ஸ்!

பல்டி திரைப்படத்திற்கான சாந்தனு கிளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகம் தற்போது பல்டி படத்தில் நடித்து முடித்... மேலும் பார்க்க