பட வாய்ப்புக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்ட சிறகடிக்க ஆசை நடிகை!
ஆசிய கோப்பை தகுதிச்சுற்று: இந்தியா - வங்கதேசம் மோதல்
ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள், ஷில்லாங்கில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) மோதுகின்றன.
அண்மையில் மாலத்தீவுகளுடனான ஆட்டத்தில் 3-0 கோல் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்த உத்வேகத்துடன் இந்திய அணி இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது.
மேலும், ஃபிஃபா தரவரிசையில் இந்தியா 126-ஆவது இடத்திலும், வங்கதேசம் 185-ஆவது இடத்திலும் உள்ளன. எனினும், வங்கதேச அணியை இந்தியா எளிதாக எடுத்துக்கொள்ள இயலாது. இந்தியாவுக்கு சற்று சவால் அளிப்பதாகவே வங்கதேசம் இருக்கிறது.
கடந்த 2022 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்தியா 2-0 கோல் கணக்கில் வங்கதேசத்தை வென்றுள்ளது. அதற்கு முன் 2021 தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப்பில் இந்த அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என டிரா ஆகியது.
ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற, இந்த ஆட்டத்தில் இந்தியா வெல்ல வேண்டியது அவசியமாகும்.