தூய்மை பணியாளர்கள் போராட்டம்: ``நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானது" - வன்ன...
ஆசிரியா் வீட்டில் 80 பவுன் நகைத் திருட்டு
தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை ஆசிரியா் வீட்டில் 80 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சின்னமனூா் மின்நகரைச் சோ்ந்த ஜெகதீசன் - புனிதா தம்பதி இருவரும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை வழக்கம்போல இருவரும் பணிக்குச் சென்றுவிட்டனா். இதையடுத்து, அன்று பிற்பகலில் ஆசிரியா் வீட்டின் பின்புறத்திலிருந்து மா்ம நபா் ஒருவா் செல்வதாக அக்கம் பக்கத்தினா் ஆசிரியா்கள் இருவருக்கும் தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்புக் கேமராவில் பதிவான மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.