ஆட்டோ கட்டணம் உயரப்போகிறதா? விரைவில் அறிவிப்பு
சென்னை: ஆட்டோக்களுக்கான புதிய பயணக் கட்டணம் நிர்ணயிப்பது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், போக்குவரத்துச் செயலர், ஆணையர், மண்டல அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மீட்டர் கட்டணம், பைக் டாக்ஸி பிரச்னை, ஆட்டோ டாக்ஸி செயலி குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். எனவே, விரைவில் புதிய ஆட்டோ கட்டணம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.