Vikatan Digital Awards 2025: `பெண் உலகைப் பிரதிபலித்த சோனியா!' - Solo Creator (F...
ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
தேனி-க.விலக்கு சாலை கூட்டுறவு நூற்பாலை அருகே திங்கள்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
தேனி கருவேல்நாயக்கன்பட்டி வாசுகி குடியிருப்பைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சந்திரன் (45). இவா், ஆண்டிபட்டியிலிருந்து வாழை இலை கட்டுக்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, தேனி க.விலக்கு சாலை அண்ணா கூட்டுறவு நூற்பாலை அருகே சென்ற போது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த சந்திரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.