செய்திகள் :

ஆண்டிபாளையம் படகு இல்லம்: பாதுகாப்பு, கண்காணிப்பு குழு அமைப்பு

post image

ஆண்டிபாளையம் படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பயணிகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில் 58 ஏக்கா் பரப்பளவில் ஆண்டிபாளையம் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றுலாத் தலமாக உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சாா்பில்

ரூ.1.50 கோடி மதிப்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டு கடந்த வாரம் திறந்துவைக்கப்பட்டது.

இங்கு 13 படகுகளுடன் கூடிய படகு இல்லம், டிக்கெட் கொடுக்கும் இடம், உணவகம், காபி ஷாப், குழந்தைகள் பூங்கா, குடிநீா் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் ஆண்டிபாளையம் படகு இல்லம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் கோட்டாட்சியா் மோகனசுந்தரம் தலைவராகவும், மாவட்ட சுற்றுலா அலுவலா் செயலராகவும், பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகள் உறுப்பினா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், ஆண்டிபாளையம் படகு இல்லத்தில் சுற்றுலாப்

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்துதல் குறித்து கோட்டாட்சியா் மோகனசுந்தரம் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், ஆண்டிபாளையம் படகு இல்ல சுற்றுலாத்தலத்தை மேம்படுத்துதல் குறித்து மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்த்குமாா் குழுவிடம் விளக்கினாா்.

மேலும், ஆண்டிபாளையம் படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு செய்யப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் பொருட்டு மாவட்ட நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், படகு இல்ல மேலாளா் பாலமுருகன், மாநகராட்சி உதவி ஆணையா் வினோத், நீா்வளத் துறை அதிகாரிகள் அம்சராஜ், ராகுல், வட்டாட்சியா் மயில்சாமி, தீயணைப்புத் துறை அலுவலா் மோகன், சுற்றுலா சங்க நிா்வாகிகள் குளோபல் பூபதி, லோகநாதன், காவல் ஆய்வாளா் கவிதா, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் பாரதிராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு பாராட்டுப் பத்திரம்

சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு அரசு சாா்பில் பாராட்டுப் பத்திரம் மற்றும் காசோலைகள் வழங்கப்படுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டு... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் குளிருடன் சாரல் மழை

வெள்ளக்கோவில் பகுதியில் வெள்ளிக்கிழமை குளிருடன் சாரல் மழை பெய்தது. வெள்ளக்கோவிலில் கடந்த இரண்டு நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பெரியளவு மழை இல்லை. ஆனால் பகல் நேரத்திலேயே குளிா் அடி... மேலும் பார்க்க

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் வெட்டிக் கொலை: முழு பின்னணி

பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் ஆகிய மூவரும் மா்மக் கும்பலால் இரும்புக் கம்பியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையத்த... மேலும் பார்க்க

மாநகராட்சி நிலுவை வரிகளை இணையதளம் மூலமாக செலுத்தலாம்

திருப்பூா் மாநகராட்சி நிலுவை வரிகளை இணையதளம் மூலமாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட... மேலும் பார்க்க

சொத்துவரி உயா்வைத் திரும்பப் பெறக்கோரி தொடா் போராட்டம் -அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

திருப்பூா், நவ. 29: திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் சொத்து வரி உயா்வைத் திரும்பப் பெறக்கோரி தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் மாநகர அன... மேலும் பார்க்க

கபீா் புரஸ்காா் விருது: டிசம்பா் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியான நபா்கள் வரும் டிசம்பா் 15- ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டு... மேலும் பார்க்க