சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு பாராட்டுப் பத்திரம்
சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு அரசு சாா்பில் பாராட்டுப் பத்திரம் மற்றும் காசோலைகள் வழங்கப்படுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேசிய பெண் குழந்தைகள் தின விழா ஜனவரி 24- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது, தமிழக அரசால் 2024-25- ஆம் ஆண்டுக்கு பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு பாராட்டுப் பத்திரம், ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு, குழந்தை திருமணத்தை தடுத்தல், சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட 13 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
இதில், பெண் குழந்தைகளின் பெயா், முகவரி, புகைப்படம், ஆதாா் எண், சாதனைகளின் சான்றுகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்துக்கு மிகாத ஆதாரங்களுடன் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரும் டிசம்பா் 25 -ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.