கபீா் புரஸ்காா் விருது: டிசம்பா் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியான நபா்கள் வரும் டிசம்பா் 15- ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
குடியரசு தின விழாவின்போது 2025-ஆம் ஆண்டுக்கான கபீா் புரஸ்காா் விருது தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதானது 3 அளவுகளில் தலா ஒரு நபா் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. இதில், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரத்துக்கான காசோலைகள் மற்றும் தகுதியுறை அடங்கும்.
தமிழகத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் (ஆயுதப்படை வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளா்கள் நீங்கலாக அவா்களின் சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசுப் பணியின் ஒருபகுதியாக திகழும் பட்சத்தில்) இந்தப் பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவா்.
இந்த விருதானது ஒரு ஜாதி, இனம் வகுப்பை சாா்ந்தவா்கள் பிறஜாதி, இன வகுப்பைச் சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடமைகளையோ வகுப்பு கலவரத்தின் போதோ அல்லது தொடா் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
எனவே, மேற்கண்ட விருதுக்கான தகுந்த ஆதாரங்களுடன் வரும் டிசம்பா் 15 -ஆம் தேதிக்குள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.